கோவை அருகே 6வது நாளாக எரியும் காட்டுத் தீ - ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரம்!

கோவை மாவட்டம் நாதே கவுண்டன்புதூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் பற்றிய காட்டுத் தீ 6 வது நாளாக எரிந்து வருகிறது. பல ஏக்கர் பரப்பளவில் பற்றி எரிந்து வரும் தீயை ஹெலிகாப்டர் மூலம் அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



கோவை: ஆலாந்துறை அருகே தொடர்ச்சி மலையில் 6 வது நாளாக பற்றி எரியும் காட்டுத் தீயை ஹெலிகாப்டர் மூலம் கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே நாதேகவுண்டன் புதூரில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ ஏற்பட்டு இன்றுடன் 6 நாட்கள் ஆகிறது. காட்டுத்தீயை அணைக்க வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தீத்தடுப்பு கோடுகள் அமைத்தும், தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி நேரில் சென்று ஆய்வு செய்து, தீயை அணைக்க வனத்துறையினரிடம் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டார். இருந்தபோதும், காட்டுத் தீ முழுமையாக அணைக்கப்படாமல் இருந்து வருகிறது.



இந்த நிலையில், 6வது நாளான இன்று சூலூர் விமான தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு வருகிறார்.

மேலும், மாவட்ட வன அலுவலர்களும் உடனிருக்கின்றனர். ஆறு நாட்களாக பற்றியெரிந்து வரும் காட்டு தீ இன்றுடன் அணைக்கப்பட்டு விடும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...