மூலனூர் அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் - தடுக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

தாராபுரம், குண்டடம் பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் மூலனூர் - தாராபுரம் இடையே உடைப்பு ஏற்பட்டு கடந்த 10 நாட்களாக குடிநீர் வீணாகி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: மூலனூர் - தாராபுரம் செல்லும் சாலையில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக வெள்ளகோவில், மூலனூர், குளத்துப்பாளையம் வழியாக தாராபுரம், குண்டடம் ஆகிய பகுதிகளுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.



இந்த நிலையில் மூலனூர் - தாராபுரம் செல்லும் சாலையில் சோமன் கோட்டை பிரிவு அருகே கடந்த 10 நாட்களாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி சாலையில் ஆறாக ஓடுகிறது.



கோடை காலத்தில் அதிகமான குடிநீர் சாலையில் வீணாக செல்வது வேதனையாக உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த இடத்தில் அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருவதாகவும் கூறுகின்றனர்.

இந்நிலையில் இந்த குடிநீர் குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...