தாராபுரம் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஐந்து பேர் படுகாயம்!

தாராபுரம் அடுத்த சிக்கனாபுரம் பகுதியில் நின்றிருந்த கார் மீது மற்றொரு கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உட்பட 5 பேர் படுகாயமடைந்து, தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


திருப்பூர்: தாராபுரம் அடுத்த சிக்கனாபுரம் பகுதியில் நின்றிருந்த கார் மீது மற்றொரு கார் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த அரசு போக்குவரத்து ஓட்டுநர் கிருஷ்ணா சிங். இவர் தனது மனைவி சங்கீதாவுடன், காரில் வால்பாறையில் இருந்து உடுமலை ரோடு கிருஷ்ணாபுரம் வழியாக எடப்பாடி நோக்கி சென்றுள்ளனர்.

அப்போது உடுமலை விழா மரத்துப்பட்டியை சேர்ந்த ரத்தினசாமி, சுப்பிரமணி மற்றும் மிதுன் ஆகியோர் வெள்ளகோவில் உள்ள தங்களது குலதெய்வ கோயிலுக்கு சென்றுவிட்டு உடுமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

வால்பாறையில் இருந்து வந்த கிருஷ்ணா சிங், சிக்னாபுரம் பகுதியில் சாலையோரத்தில் காரை நிறுத்திவிட்டு அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது வெள்ளகோவிலில் இருந்து உடுமலை நோக்கி சென்று கொண்டிருந்த கார் சிக்னாபுரம் பகுதியில் நின்றிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இரண்டு கார்களில் இருந்த ஐந்து பேர் பலத்த காயமடைந்தனர். இந்நிலையில், காயமடைந்த ஐந்து பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் ஒருவர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த இரண்டு கார்கள் மோதிய விபத்து குறித்து அலங்கியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...