கோவையில் இலவச மருத்துவ முகாம் - எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார்

கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட 83வது வார்டில், அனுப்பர்பாளையம் பகுதியில், மக்கள் சேவை மையம் மூலம் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவும், பாஜக மகளிரணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார்.


கோவை: கோவையில் மக்கள் சேவை மையம் மூலம் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மக்கள் சேவை மையம் மூலம் தொடர்ந்து இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறார்.



அதன் தொடர்ச்சியாக இன்று பிஎஸ்சி மருத்துவமனை மற்றும் வோர்ல்டு மலையாளி கவுன்சில் சார்பில் கோவை தெற்கு தொகுதி 83 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அனுப்பர்பாளையம் மாநகராட்சி பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.



இதனை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.



மேலும் தெற்கு தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் இந்த இலவச மருத்துவ முகாம் குறித்தும் பொது மக்களிடையே எடுத்துக் கூறினார்.

இந்த நிகழ்வில், பல்வேறு பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுச் சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...