கோவை வந்தடைந்த பொன்னியின் செல்வன் படக்குழுவினர் - டுவிட்டரில் பதிவு!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் திரைப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக படக் குழுவினர் விமானம் மூலம் கோவைக்கு வருகை தந்துள்ளனர்.


கோவை: பொன்னியின் செல்வன் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்க கோவைக்கு வருகை புரிந்துள்ள திரைப்பட குழுவினர்.

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து வருகின்ற 28ஆம் தேதி இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இரண்டாம் பாகத்தின் விளம்பர நிகழ்வுகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக இன்று கோவையில் படத்தின் விளம்பர நிகழ்வு நடைபெறுகிறது. சரவணம்பட்டி பகுதியில் உள்ள Prozone (தனியார்) மாலில் இந்நிகழ்வு இன்று மாலை 4:30 மணி அளவில் நடைபெறுகிறது.



இதனை முன்னிட்டு படக்குழுவினர் விமானம் மூலம் கோவை வந்தடைந்துள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இத்திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, நடிகைகள் திரிஷா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் தற்போது கோவைக்கு வருகை புரிந்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...