தொடர் விடுமுறையால் உதகைக்கு படையெடுத்துள்ள சுற்றுலா பயணிகள் - திருவிழாக்கோலம் பூண்ட சுற்றுலா தலங்கள்!

தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகைக்கு படையெடுத்துள்ளதால் உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.


நீலகிரி: தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகைக்கு படையெடுத்துள்ளனர்.

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் உதகையில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் காலமாகும். அப்போது நிலவும் இதமான காலநிலையை அனுபவித்து சுற்றுலாத்தலங்களை கண்டு ரசிப்பதற்காக சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

அதேபோல இந்த ஆண்டிற்கான கோடை சீசன் தற்போது தொடங்கி உள்ளது.



இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே தினந்தோறும் சுற்றுலா பயணிகளின் வருகை படிப்படியாக அதிகரித்து வருகிறது.



குறிப்பாக தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக அதிகரித்துள்ளது.



அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் உதகை தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தளங்களை காண குவிந்து வருவதால் சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.



சமவெளி பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தமிழகத்தை சார்ந்த சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் உதகைக்கு படையெடுத்து வருகின்றனர்.

இதனால் உதகைக்கு செல்லும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் காணப்படுகிறது. அவற்றை போக்குவரத்து போலீசார் உடனுக்குடன் சீர் செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...