காட்டுத்தீயை தடுக்க மாவட்டந்தோறும் குழுக்கள் - வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு தகவல்!

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு, கோடை காலத்தில் அதிக வெப்பத்தால் காட்டுத்தீ பரவாமல் தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் 4 முதல் 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும், குழுவிலும் 20 முதல் 25 இருப்பார்கள் எனவும் தெரிவித்தார்.



கோவை: கோடைகாலத்தில் ஏற்படும் காட்டுத் தீயை தடுப்பதற்காக மாவட்டம் தோறும் 4 முதல் 5 குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதாக தமிழக வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு பேசியதாவது, கோவை ஆலாந்துறை அருகே கடந்த ஐந்து நாட்களாக பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் 200க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கோடை காலத்தில் அதிக வெப்பத்தால் காட்டு தீ பரவாமல் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் காட்டு தீ தடுப்பு நடவடிக்கையாக நான்கு முதல் ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் 20 முதல் 25 இருப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...