உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் குவியும் சுற்றுலா பயணிகள் - பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்ந்தனர்

தொடர் விடுமுறையை முன்னிட்டு, உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி மலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க பஞ்சலிங்க அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.


திருப்பூர்: உடுமலை அடுத்த திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் கோடையிலும் அருவி நீர் கொட்டி வருவதால் தொடர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வெப்பத்தை தணிக்க குடும்பத்துடன் பஞ்சலிங்க அருவிபகுதியில் குடும்பத்துடன் குவிந்து வருகின்றனர்.



விடுமுறை நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகளவு குவிந்து ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.



இதனிடையே, திருமூர்த்தி மலை பகுதியில் உள்ள பஞ்சலிங்க அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் சுற்றுலா பயணிகள் குவிந்த காரணத்தால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...