பன்னிமடை அருகே தோட்டத்தில் புகுந்து மாட்டுத் தீவனங்களை சேதப்படுத்திய காட்டு யானை - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்!

பன்னிமடை அடுத்த வரப்பாளையம் பிரிவு பகுதியில் கணேசன் என்பவரது தோட்டத்திற்குள் நேற்றிரவு புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கிருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே இருந்த மாட்டு தீவணங்களை தின்று சேதப்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.



கோவை: பன்னிமடையை அடுத்த வரப்பாளையம் பகுதியில் விவசாய தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை யானை அங்கிருந்த அறையின் கதவை உடைத்து சேதப்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஆனைகட்டி மலைப்பகுதியில் காட்டு யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது மலையடிவார பகுதிகளான மாங்கரை, தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், வரப்பாளையம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் உணவு தேடி வந்து செல்கின்றன.



இந்த நிலையில் நேற்று இரவு பன்னிமடை அடுத்த வரப்பாளையம் பிரிவு பகுதிக்கு வந்த ஒற்றை காட்டு யானை, கணேசன் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்துள்ளது.



அப்போது, அங்கிருந்த தோட்டத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே இருந்த மாட்டுத் தீவனங்களை தின்று சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளது.



இவை அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...