தாராபுரத்தில் நடந்த தொடர் கொள்ளை வழக்கு - வாகன சோதனையில் சிக்கிய 4வது குற்றவாளி!

தாராபுரத்தில் பூட்டிய வீடுகளில் கதவுகளை உடைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த 4வது நபரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில், இவர் திண்டுக்கல் மாவட்டம், மீனம்பட்டியை சேர்ந்த ராமர் என்று தெரியவந்தது. தாராபுரத்தில் போலீசார் நடத்திய வாகன சோதனையின்போது ராமர் பிடிபட்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புறநகர் பகுதிகளில் பூட்டி இருந்த வீடுகளை கண்காணித்து, கதவுகளை உடைத்து அடுத்தடுத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 4 நபர்கள் கொண்ட குழுவில் மூன்று பேரை போலீசார் கைது செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள்ளனர் இந்நிலையில் இவர்களது கூட்டாளிகளில் நான்காவது நபரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், தாராபுரம் கரூர் சாலை ஆச்சியூர் பிரிவு அருகே காவல் துணை கண்காணிப்பாளர் தன்ராஜ் உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் கருப்புசாமி, முத்துக்குமார், முருகேசன், தலைமை காவலர்கள் வேலுமணி, கார்த்திக் கலைச்செல்வன், பாலசுப்பிரமணியன், ராமர் ராமலிங்கம் ஆகிய போலீசார் அடங்கிய குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த சான்ட்ரோ கார் ஒன்றை தடுத்து நிறுத்தி, அதை ஓட்டி வந்த இளைஞரிடம் விசாரணை நடத்தினர்.



அதில், அந்த நபர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா மீனம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த சந்தனத்துரை என்பவரது மகன் ராமர் (வயது 26) என்பது தெரியவந்தது. மேலும், தாராபுரம் புறநகர் பகுதியான அசோக் நகர் செல்லத்துரை என்பவரது வீட்டில் நடைபெற்ற கொள்ளை தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட மூன்று நபர்களுடன் இவருக்கும் தொடர்பிருந்தது உறுதிசெய்யப்பட்டது.



இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், தொடர்ந்து நடத்திய விசாரணையில், அசோக் நகர் செல்லத்துரை வீட்டில் கொள்ளை அடித்த மூன்று சவரன் தங்க நகை அரை கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவைகளையும், கொள்ளையடித்த பணத்தில் விலைக்கு வாங்கிய ரூ 2 -1/2 லட்சம் மதிப்புள்ள சான்ட்ரோ கார் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிபதி பாபு, தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலின் நான்காவது குற்றவாளியான ராமரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து, அவர் தாராபுரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...