பல்லடத்தில் பிரம்மாண்ட ஆர்.எஸ்.எஸ். பேரணி - பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பாதுகாப்புக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங்சாய் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


திருப்பூர்: பல்லடத்தில் ஆர்எஸ்எஸ் பேரணியில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

தமிழகத்தில் 45 இடங்களில் இன்று ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து முன்னணி தலைமையில் பேரணி நடைபெற்றது.



அதன் ஒரு பகுதியாக, பல்லடத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பேரணியை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வரர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.



வடுகபாளையம் பகுதியில் இருந்து ஸ்ரீநகர் வழியாக கொசவம்பாளையம் சாலை பிரிவு திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வரை பேரணி நடைபெற்றது.



மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெற்ற இந்தப் பேரணியில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து முன்னணியினர் கலந்துகொண்டனர்.



இதைத் தொடர்ந்து, கொசவம்பாளையம் சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.



இந்தப் பேரணியையொட்டி, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங்சாய் தலைமையில் ஏராளமான போலீசார் மற்றும் அதிரடிப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஆர்.எஸ்.எஸ் சார்பில் இதுபோன்ற பேரணிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு, அம்பேத்கர் ஜெயந்தி விழா, தமிழ் வருடப்பிறப்பு, வீரசிவாஜியின் 350வது பிறந்தநாள், வள்ளலாரின் 200 வது பிறந்த நாள் ஆகியவற்றை முன்னிறுத்தியும், பொதுமக்களுக்கு ஆர்.எஸ்.எஸ்-ன் சுயசார்பு இந்தியாவை கட்டமைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் இந்த பேரணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...