பொள்ளாச்சியில் பலத்த பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ் பேரணி

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தில் சீருடை அணிந்தபடி 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்துகொண்டனர். ஆர்.எஸ்.எஸ் ரதம் மீது பொதுமக்கள் மலர்தூவி வரவேற்றனர்.


கோவை: பொள்ளாச்சியில் நடந்த ஆர்எஸ்எஸ் பேரணியில், தொண்டர்கள் வெள்ளைசட்டை, சீருடை அணிந்து பேண்ட் வாத்தியம் முழங்க பேரணியாக நடந்து வந்தனர்.

தமிழகத்தில் 45 இடங்களில் இன்று ஆர்.எஸ்.எஸ் சார்பில் பேரணி நடைபெற்றது.



அதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சியில் பல்லடம் சாலையில் ராஜேஸ்வரி மண்டபத்தில் தொடங்கிய ஆர்.எஸ்.எஸ். பேரணி பைவ் கார்னர், மகாலிங்கபுரம் ரவுண்டானா, கோவை சாலை வழியாக காந்தி சிலை வந்து அங்கிருந்து புதிய திட்டை சாலை வழியாக மீண்டும் ராஜேஸ்வரி மண்டபத்தை அடைந்தது.



இதில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் வெள்ளைசட்டை, சீருடை அணிந்து பேண்ட் வாத்தியம் முழங்க பேரணியாக கம்பிரமாக நடந்துவந்தனர்.



அப்போது, பேரணியுடன் வந்த ஆர்.எஸ்.எஸ் ரதம் மீது பொதுமக்கள் மலர்தூவி வரவேற்றனர்.



இந்த பேரணியில் மதுக்கரை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை ஆகிய பகுதிகளில் இருந்து வந்த 500-க்கும் மேற்பட்ட ஆர் எஸ்எஸ் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.



இந்தப் பேரணியையொட்டி, கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில் 450-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...