'ரொம்பப் பேசினால் அரசாங்கம் போய்விடும்..!' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எச்.ராஜா எச்சரிக்கை

தமிழக அரசின் அகம்பாவம் உச்சகட்டத்திற்கு போயிருக்கிறது. ஆளுநர் கையில் தகவலும், தரவுகளும் இருக்கின்ற காரணத்தால் பேசியிருக்கிறார். ஸ்டாலின் ரொம்ப பேசினால் அரசாங்கம் போய்விடும் என்று கோவையில் நடந்த ஆர்எஸ்எஸ் பேரணியில் கலந்துக் கொண்ட பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.


கோவை: பாஜக தலைவர் அண்ணாமலை, திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார். அவர்கள் 17 பேரும் கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்யட்டும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார்.

கோவை தேர்நிலை திடலில் ஆர்எஸ்எஸ் கூட்டத்திற்கு பின்னர் பாஜக மூத்த தலைவர் எச் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது பேசிய அவர், PFI (பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்) இந்தியா உட்பட 8 அமைப்புகள் மத்திய அரசால் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. தடைக்கு மறுநாள் தமிழ்நாட்டில் திருமாவளவன், சீமான் ஆகியோர் மனித சங்கிலி நடத்த காவல்துறை அனுமதி கொடுத்தது. அது மனித சங்கலி அல்ல.. சங்கிலியின் ஒரு பிட்டுதான். ஆனால் தொடர்ந்து, ஆர் எஸ் எஸ் பேரணிக்கு இவர்கள் தடை விதித்து வந்தார்கள்.

சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி கொடுக்க அறிவுறுத்தியும், காசை கொண்டு உச்சநீதிமன்றம் சென்று தடை விதிக்க கூறினார்கள். ஆனால் உச்சநீதிமன்றம் தடை விதிக்க முடியாது என கூறிவிட்டது. எனக்கு பெரிய அதிர்ச்சி என்னவென்றால், தமிழ்நாடு அரசு, டிஜிபி யாருக்காக இருக்கின்றனர்? தேசதுரோகிகளுக்கா? பயங்கரவாதிகளுக்கா?.

இந்த மாநில அரசு தேச துரோகிகளின் அரசு என நான் பலமுறை கூறி வந்துள்ளேன். அது நேற்று நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காவல்துறை மற்றும் அரசாங்கம் பிரிவினைவாத தீய சக்திகள். குறிப்பாக தனித் தமிழ்நாடு கேட்கும் தமிழ் தேசிய இயக்கங்கள், திருமாவளவன்மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

பழனியில் காவல் நிலையத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். அது ரவுடித்தனமான செயல். அந்த தீய சக்திகளை செயல்பட அனுமதித்து விட்டு, தேசபக்த சக்திகளை நசுக்க பார்க்கின்றீர்கள் அது உங்களால் முடியாது. ஒவ்வொரு முறையும் தோற்றுதான் போவீர்கள். இன்று 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது. இனிமேலாவது திருந்துங்கள்.

காவல்துறை இன்று பல கட்டுப்பாடுகள் விதித்திருந்தது. தீய சக்திகளின், பிரிவினைவாதிகளின், பயங்கரவாதிகளின் ஏவல் துறையாக காவல்துறை மாறிக் கொண்டிருக்கிறது என்ற அய்யப்பாடு ஏற்படுகிறது. நான் ஓராயிரம் முறை சொல்லுவேன், பிஎஃப்ஐ தேசத்துரோகிகள். அதனால்தான், அவர்கள் தடை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

ஒரே நாளில் 19 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசிய வன்முறைவாதிகள், பயங்கரவாதிகள். ராகுல் காந்தி ஒரு சாதியை இழிவாக பேசினார் என்பதால் அந்த சாதியை சேர்ந்த ஒரு நபர் வழக்கு தொடுத்தார். அதற்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி கொல்லிகட்டையால் தலையை சொறிந்து கொள்கிறார்.

பாஜகவிற்கு பெரிய பிரச்சார பீரங்கியே ராகுல் காந்திதான். ராகுல் காந்தி பேசிவிட்டு வந்தால் பத்தாயிரம் ஓட்டுக்கள் எங்களுக்கு அதிகமாகத்தான் விழும். பாஜக தலைவர் திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார். அவர்கள் 17 பேரும் கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்யட்டும், அண்ணாமலை சொல்லியது அனைத்தும் பொய், இந்த சொத்து எதுவும் எங்களுடையது இல்லை என தாக்கல் செய்யட்டும். அண்ணாமலை பாஜகவின் மாநிலத் தலைவர். அவர் வெளியிட்டது பா.ஜ.க கட்சியின் கருத்துதான்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, தமிழ்நாடு அரசு ஆளுநர் விவாதம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழக அரசின் அகம்பாவம் உச்சகட்டத்திற்கு போயிருக்கிறது என்று கூறிய எச்.ராஜா, ஆளுநர் கையில் தகவலும், தரவுகளும் இருக்கின்ற காரணத்தால் பேசியிருக்கிறார் எனவும், ஸ்டாலின் ரொம்ப பேசினால் அரசாங்கம் போய்விடும் என்றும் தெரிவித்தார்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...