வால்பாறை அருகே காட்டுத் தீ - மரங்கள், செடிகொடிகள் எரிந்து சேதம்

வால்பாறை அருகே அட்டகட்டி வரையாட்டு பாறை பகுதியில் காட்டு தீ ஏற்பட்டு உள்ளது. தீ அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர். தீ விபத்து குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில்வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தால் காடுகளில் தண்ணீர் வறண்டு, மரங்களில் உள்ள இலைகள் காய்ந்து,காடுகள் வறட்சியாக காணப்படுகிறது.



வனத்துறையினர் காட்டு தீ ஏற்படாத வண்ணம்பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட அட்டகட்டி பகுதியில் உள்ள வரையாட்டுப்பாறை வனப்பகுதிக்குள் திடீர் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.



சுமார் 7 மணி அளவில் ஏற்பட்ட இந்தத் தீ நள்ளிரவுவரை வனப்பகுதியில் பரவியதில் அங்கிருந்த புற்கள், மரங்கள் எரிந்து சாம்பலகின. வால்பாறை வனத்துறை வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையிலும் பொள்ளாச்சி வனத்துறையினர் சார்பாகவும் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வனவர்கள் காட்டிற்குள் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது தீ முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது. வனப்பகுதிக்குள் எவ்வாறு தீ பிடித்தது என்று வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...