கோவையில் 'லியோ' பட அப்டேட் கேட்ட ரசிகர்கள் - நடிகை திரிஷா பதில்

கோவையில் பொன்னியின் செல்வன் 2ம் பாக விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற திரிஷாவிடம், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் லியோ படத்தின் அப்டேட் குறித்து ரசிர்கள் கேள்வி எழுப்பினர். லியோ படத்தின் ஷூட்டிங்கில் இருந்துதான் வருவதாகக் கூறிய திரிஷா, மற்ற விஷயங்களை லியோ பட நிகழ்ச்சியின்போது பேசுவோம் என்று கூறினார்.


கோவை சரவணம்பட்டி பகுதியில் தனியார் மாலில் நடைபெற்றபொன்னியின் செல்வன் இரண்டாம் பாக விளம்பர நிகழ்ச்சியில் நடிகை திரிஷா பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகை திரிஷா, நான் கோவைக்கு வந்து பல வருடங்கள் ஆகிறது. நீண்ட நாட்கள் கழித்து தற்போது கோவைக்கு வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தார்.



அப்போது, திரிஷாவிடம் விஜய் நடித்து வரும் LEOபடத்தின் அப்டேட் குறித்து ரசிகர் கேட்டு, LEO, LEO என முழக்கமிட்டனர். ஆனால், திரிஷா அது குறித்து பதிலளிக்காமல்,நான் தற்போது LEO பட சூட்டிங்கில் இருந்துதான் வருகிறேன்.இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் உங்கள் தளபதி நல்லா இருக்காங்க.மற்றவற்றை LEO நிகழ்ச்சியில் பேசிக் கொள்ளலாம் என்றார்.



ட்விட்டரில் இருந்து எடுக்கப்பட்ட கேள்விகள் சில திரிஷாவிடம் கேட்கப்பட்டது. அதன்படி, திரிஷாவிடம் குந்தவைக்கு சுயம்வரம் எப்போது? சுயம்வரத்திற்கு நாங்கள் வரலாமா? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, என் உயிர் அவர்களுடையது என ரசிகர்களை கை காண்பித்தார்.



பிறகு அருண்மொழி வர்மன், வந்தியதேவன், ஆதித்த கரிகாலனை 1,2,3 என மனத்தில் உள்ளதைபோல் வரிசைப்படுத்த வேண்டும் என கேட்கப்பட்டதற்கு,PS2 புரோமோசன் என்பதால்,என் இதயத்தில் இருப்பது இப்போதைக்கு VT(வந்தியதேவன்) தான் என திரிஷா பதிலளித்தார்.



தொடர்ந்து பேசிய அவர், கோவையில் மூன்று விஷயங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும். ஒன்று கோவை மக்கள் பேசும் தமிழ்.. இரண்டாவது உங்களுடைய சாப்பாடு.. மூன்றாவது கோவையில் எப்போதுமே இருக்கும் அமைதி...என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...