நாயகன் 2ம் பாகத்தில் நடிக்க ஆசை ..! - கோவையில் பிஎஸ் 2 விழாவில் நடிகர் ஜெயம் ரவி பேச்சு

கோவையில் பிஎஸ்-2 புரமோசன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஜெயம் ரவி, நடிகர் கார்த்தி கான்பிடன்ஸ் உடன் இருப்பார். திரிஷா அசால்டாக இருப்பதோடு எல்லாரையும் மயக்கிவிட்டு போய்க்கொண்டே இருப்பார் என்று பேசினார்.


கோவை சரவணம்பட்டியில் பொன்னியின் செல்வன் திரைப்பட இரண்டாம் பாகத்தின் விளம்பர நிகழ்ச்சியில் நடிகர் ஜெயம் ரவி பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், எப்போது கோயம்புத்தூர் வந்தாலும் அன்பு பாசமும் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. கடைசியாக மிருதன் பட சூட்டிங்கிற்காக கோவை வந்தபோது, சூட்டிங் ஸ்பாட்டில் மக்கள் தன்னை பார்க்க திரண்டு வந்ததால் திகைத்து போனேன்.



கோவை இரண்டாவது வீடு என மனதார சொல்கிறேன். மக்கள், ரசிகர்கள், எப்போது அன்பாக நடந்து கொள்கின்றனர். பொன்னியின் செல்வன்- 2 ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகிறது. பிஎஸ்-1 திரைப்படத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் எங்கள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்து இருக்கின்றது.



இதே மாதிரி பிஎஸ்-2க்கும் கொடுப்பீர்கள் என நம்புகிறோம். நிறைய நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்றுபோது பிஎஸ்-1 எந்த படத்துடன் ஒப்பிட்டு பார்க்கிறீர்கள் என கேட்பார்கள், பிஎஸ்-2 உடன் ஒப்பிட்டு பாருங்கள் என தெரிவிப்பேன்.



இது மிகவும் கஷ்டப்பட்டு எடுத்த படம். தேவையான படம் என்பது உங்களுக்கு தெரியும். என்னை இங்கே இருக்கும் ஒவ்வொரு பெண்மணியும் காப்பாற்றி கொண்டிருக்கிறார்கள். மனைவி கிட்ட மாட்டிகிட்டால் ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும். மாட்டிக்கொள்ளாமல் என்ன வழியோ அதை பார்க்க வேண்டும்.

இயக்குநர் மணிரத்னம் எடுத்த படத்தில் நாயகன் பார்ட் - 2 படத்தில் நடிக்க ஆசை. பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பூங்குழலி பூ எனும் நிஜமான நடிகையாகவே மாறிவிட்டார்.

நடிகர் கார்த்தி கான்பிடன்ஸ் உடன் இருப்பார். திரிஷா அசால்டாக இருப்பதோடு எல்லாரையும் மயக்கிவிட்டு போய்க்கொண்டே இருப்பார். எனக்கு சினிமா குருவும் அப்பாதான். சின்ன தவறுகளை கூறினாலும் அதை கவனித்து அவர் சரி செய்வார்.

இவ்வாறு ஜெயம் ரவி பேசினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...