கோவையில் பொன்னியின் செல்வன்-2 புரமோஷன் - விடுபட்ட வசனங்கள் குறித்து நடிகர் கார்த்தி வருத்தம்!

நம் இளவரசி இருக்கிறாரே மிகவும் திறமைசாலி. நரகத்திற்கு செல்பவர்களைகூட தடுத்து நிறுத்தி சொர்க்கத்திற்கு அனுப்பி விடுவார். ஆனால் நந்தினி அதைவிட திறமைசாலி. நரகத்தையே இதுதான் சொர்க்கம் என நம்ப வைத்து சந்தோசமாக அனுப்பியும் விடுவார் என்று பேசிய வசனத்தை நீக்கிவிட்டதாக நடிகர் கார்த்தி கூறினார்.



கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மாலில் பொன்னியின் செல்வன்-2 விளம்பர நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, மற்றும் நடிகைகள் திரிஷா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேடையில் பேசிய நடிகர் கார்த்திக், முதலில் அவரது முதல் படமான பருத்திவீரன் படத்தில் வரும் "என்ன மாமா சவுக்கியமா?" என கோவை மக்களிடம் நலம் விசாரித்தார். தொடர்ந்து பேசிய அவர், நம்ம ஊருக்கு வந்தால் சந்தோஷமாகத்தான் இருக்கும். பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆகும் பொழுது சவால் ஒன்று இருந்தது. படித்தவர்களுக்கும் பிடிக்க வேண்டும். படிக்காதவர்களுக்கும் புரிய வேண்டும். இவை இரண்டும் பெரிய சவால்களாக இருந்தன.

முதலில் படித்தவர்களுக்கு பிடிக்க வைப்பது மிகவும் சிரமம். படித்தவர்கள் புத்தகம் எடுத்துக்கொண்டு வருவார்கள். படிக்காதவர்கள் கதையை புரியவில்லை என கூறுவார்கள். எனவே இரண்டு பேருக்கும் பிடிப்பதுபோல் படம் எடுப்பது மிகப்பெரிய விஷயம். இதனை இயக்குநர் மணிரத்தினம் மற்றும் அவரது குழுவினர் மிகவும் சிறப்பாக செய்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் இருந்த முடிச்சுகளை எல்லாம் அவிழ்க்கின்ற விஷயங்கள் இந்த இரண்டாம் பாகத்தில் உள்ளது. இதில் அன்பான காதலும் உள்ளது ஆக்ரோஷமான காதலும் உள்ளது. ஆதித்த கரிகாலன் என்கின்ற எரிமலை வெடிப்பதை பார்க்கப் போகிறோம்.



தான் நினைத்ததை எல்லாம் சாதிக்க வேண்டும் என நினைக்கின்ற நந்தினி இனி என்னவெல்லாம் செய்யப் போகிறார் என பார்க்க போகிறோம். ட்விட்டரில் வந்தியதேவன் குந்தவைதான் பேசினார்கள். இதனை பிரச்சினையாக இழுத்து விடாதீர்கள் என்றார்.

அப்போது, அவரிடம் உங்களுக்கு(வந்தியதேவனுக்கு) ஒரு ராஜியம் வழங்கப்பட்டு அமைச்சர்கள் நியமனம் செய்யப்படும், யார் யாருக்கு எந்தெந்த துறைகளை அளிப்பீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.



அதற்கு பதிலளித்த கார்த்தி, காதல்துறை அமைச்சர்- பூங்குழலி, பேரழகுத்துறை அமைச்சர்- நந்தினி, பெண்கள் நலத்துறை அமைச்சர்- குந்தவை ஆண் அமைச்சர் என்றால் பொன்னியின் செல்வன், சிங்கிள்ஸ் நலத்துறை அமைச்சர்- வந்தியதேவன், உருட்டு அமைச்சர்- ஆழ்வார்கடியான் நம்பி என்றார்.

பின்னர் படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் குறித்து பேசிய நடிகர் கார்த்திக், இந்த படத்திலும் தனக்கு இரண்டு வசனங்கள் இருந்தது. அது, வந்தியத்தேவன் சென்று கொண்டிருக்கும்போது பெரியவர் ஒருவர் வந்து தேவனை பார்த்து எங்கு சென்று கொண்டிருக்கிறாய் ? என கேட்பார்.

அப்போது வந்தே தேவன் அந்த பெரியவருக்கு, "ஒரு சொத்து பிரச்சினை அதற்கு தீர்வு கூற வேண்டும். அதற்குதான் சென்று கொண்டிருக்கிறேன். அந்த பிரச்சனை என்னவென்றால் சொத்து அண்ணன் மகனுக்கா? அல்லது தம்பி பேரனுக்கா? என்பதுதான் பிரச்சனை. இதற்கு நான்தான் தீர்வு கூற வேண்டும்" என்பது வசனம்.

இதுதான் பொன்னியின் செல்வனின் கதை. இதனை மிகவும் எளிமையாக ஜெயமோகன் எழுதியிருப்பார் என்று தெரிவித்தார். இது உங்களுக்கு புரிந்ததா என மக்களிடம் கேள்வி எழுப்பிய அவர், மதுராந்தன் குறித்தும் ஆதித்த கரிகாலன் குறுத்தும் எடுத்து கூறி அப்புறமும் புரியவில்லை என கூறினால் பிச்சுபுடுவேன் என நகைத்தார்.

இரண்டாவது வசனம், வந்தியத்தேவன் குந்தவை பார்த்துவிட்டு வரும்போது "நம் இளவரசி இருக்கிறாரே மிகவும் திறமைசாலி. நரகத்திற்கு செல்பவர்களைகூட தடுத்து நிறுத்தி சொர்க்கத்திற்கு அனுப்பி விடுவார்கள். ஆனால் நந்தினி அதைவிட திறமைசாலி நரகத்தையே இதுதான் சொர்க்கம் என நம்ப வைத்து சந்தோசமாக அனுப்பியும் விடுவார்கள்" என கூறிய அவர், இவையெல்லாம் படத்தில் இல்லையே என வருத்தம் இருக்கிறது. எனவே, அவற்றை இங்கு சொல்லி விடுகிறேன் என்றார்.

உயிர் உங்களுடையது தேவி என்ற வசனத்திற்கு உங்கள் மனைவி என்ன கூறுகிறார்கள்? என கேள்வி எழுப்பியதற்கு, ரொமான்ஸ் இல்லாமல் நீங்கள் கதையே நடிக்க மாட்டீர்களா என கேள்வி எழுப்புவதாகக் கூறிய கார்த்தி, வீட்டில் மட்டும்தான் ரொமான்ஸ் வருவதில்லை என கூறுவார் எனவும் தெரிவித்தார்.

மேலும், வந்தியத்தேவன் அனைவரையும் பார்த்து ஜொல்லு விடுகிறார், ஆனால் கண்ணியமாக இருக்கிறார் என இந்த படத்தை பார்த்து எனது மனைவி கூறினார் என்றும், இந்த படத்தை பார்த்துவிட்டு முதல் தடவையாக எனது அம்மா படம் சூப்பர் என கூறியதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...