கோவையில் ரூ.2378 கோடிக்கு சாதனைத்திட்டங்கள் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் -எடப்பாடி கே.பழனிச்சாமி

கோயம்புத்தூரில் நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவிக்கையில்; அவினாசி – அத்திக்கடவு கூட்டுக்குடிநீர் திட்டம், ரூ.320 கோடி மதிப்பில் மேற்கு புறச்சாலை, ரூ.168 கோடி மதிப்பில் ஆத்துப்பாலம் - உக்கடம் வரை மேம்பாலம், ரூ.162 கோடி மதிப்பில் காந்திபுரம் மேம்பாலம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும். அவிநாசி சாலை லட்சுமி மில்ஸ் முதல் சின்னியம்பாளையம் வரை உயர்மட்ட மேம்பாலம், மேட்டுப்பாளையம் முதல் சாய்பாபா காலனி வரை நான்கு வழிச்சாலை, கோவை மக்களின் நீண்ட கால கனவான மோனோ ரயில் - மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வர ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும். ரூ.500.25 கோடி மதிப்பில் ஈச்சனாரி முதல் பொள்ளாச்சி வரை நான்கு வழிச்சாலை வேலை துவங்கப்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜப்பான் (ஜெய்க்கா) மற்றும் இந்தியா கார்ப்ரேசன் உதவியுடன் ரூ.300கோடி செலவில் கோவை அரசு மருத்துவமனையை உலகத்தரத்தில் மேம்படுத்தும் திட்டம், ரூ.576.70 கோடி மதிப்பில் 10,888 வீடுகள் குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் வழங்கப்படும்.

ரூ.2378 கோடிக்கு கோவை மாநகராட்சிக்கு வழங்கிய சாதனைத்திட்டங்கள்.

ரூ.125 கோடி மதிப்பில் வெள்ளலூரில் 50 ஏக்கரில், தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரிய நிதியில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், ரூ.80 கோடி செலவில் காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் - டி.பி.சாலை மற்றும் டவுன்ஹால் பகுதியில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம், ரூ.100 கோடி மதிப்பில் மூன்றாவது குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ஏதுவாக கோம்பை மலை மற்றும் கட்டன் மலையில் தனிக்குகை வழிப்பாதை, ரூ.1550 கோடி மதிப்பில் கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள பகுதிகளில் 1745 கிலோமீட்டர் நீளம் மழைநீர் வடிகால் வசதி, ரூ.130.47 கோடி மதிப்பில் தொண்டாமுத்தூர் ஒன்றியத்தில் பொதுமக்கள் பயனடையும் வகையில் பவானி கூட்டுக்குடிநீர் திட்டம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும். உக்கடம் பெரியகுளம் உட்பட நரம்பதி குளம், செல்வம்பதி குளம், கிருஷ்ணம்பதி குளம், செல்வசிந்தாமணி குளம், குமாரசாமி குளம், வாளாங்குளம், சிங்காநல்லூர் குளம் ஆகிய 8 (எட்டு) குளங்களில் இயந்திரமில்லா போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் 526 கோடி மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மேனோ ரயில் திட்டம், விமானநிலையம் விஸ்தரிப்பு போன்ற பணிகள் கோவை மாவட்டத்தில் அம்மா அரசு சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள், அம்மன் கே.அர்ச்சுனன், கஸ்தூரிவாசு, கனகராஜ், எட்டிமடை சண்முகம் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...