தீரன் சின்னமலை பிறந்தநாள் - கோவை திமுக முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் புகழாரம்!

விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 257வது பிறந்தநாளில், அவரது தியாகங்களை நினைவுகூர்வோம் என்று கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான கார்த்திக் தெரிவித்துள்ளார்.


கோவை: இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்த தமிழர்களில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தீரன் சின்னமலையும் மிக முக்கியமானவர்.

அவரின் 257வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டுவருகிறது. இதையொட்டி, சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் அவரது உருவச்சிலைக்கு, அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திவருகின்றனர்.

இந்நிலையில், தீரன் சின்னமலையின் பிறந்தநாளையொட்டி கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான கார்த்திக் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "தீரன் சின்னமலை, வீரம் விளைந்த நம் தமிழ் மண்ணில் பிறந்து, நாட்டின் விடுதலைக்காகத் தன் வாழ்வையும், வசந்தத்தையும் தியாகம் செய்த மாமனிதர். தீர்த்தகிரி கவுண்டர்’ என்றும், ‘தீர்த்தகிரி சர்க்கரை’ என்றும் அழைக்கப்படும் தீரன் சின்னமலை அவர்கள், வெள்ளையர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்து, தனது இறுதி மூச்சு வரை அடிபணியாமல், அவர்களை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்தவர்.

பல்வேறு போர்க் கலைகளைக் கற்றுத் தேர்ந்து, துணிச்சலான போர் யுக்திகளைத் தனது படைகளுக்குக் கற்றுத் தந்து, இந்திய விடுதலைப் போரில் பங்கேற்று, ஆங்கிலேயர்களுக்கு சவால் விட்டு, அவர்களின் கிழக்கிந்திய கம்பெனியை கருவறுக்க எண்ணியவர்.

ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியாவை மீட்க மைசூர் மன்னன் திப்பு சுல்தான் உடன் இணைந்து, சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் ஆகிய இடங்களில், ஆங்கிலேயர்களை எதிர்த்து நடந்த மூன்று போர்களில் ஆங்கிலேயர்களின் படைகளுக்குப் பெரும் சேதம் விளைவித்து, மூன்று முறையும் வெற்றி கண்டவர்.

கொங்கு மண்ணில் பிறந்து, வீரத்திற்கு அடையாளமாக விளங்கி, தான் மறைந்தாலும் தனது புகழ் எப்போதும் நிலைத்திருக்குமாறு செய்த தீரன் சின்னமலை அவர்களின் பிறந்தநாளான இன்று அவரை நினைவு கூர்வோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...