ஆட்டோ ஓட்டவும், ஸ்டாண்டில் நிறுத்தவும் சாதி, மத ரீதியாக பாகுபாடு - கோவை ஆட்சியர் அலுவலகத்தில் புகார்!

கோவை துடியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோவை நிறுத்துவதற்கும், ஓட்டுவதற்கும் சக ஆட்டோ ஓட்டுனர்கள், சாதி, மத ரீதியாக தடுப்பதாக கூறி, 4 ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களது குடும்பத்தினருடன் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: துடியலூர் அருகே ஆட்டோவை ஸ்டாண்டில் நிறுத்தவும், ஓட்டவும் சாதி, மத ரீதியாக தடுப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் புகார் மனு அளித்தனர்.

கோவை துடியலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோக்களை நிறுத்துவதற்கும் ஓட்டுவதற்கும் இதர ஆட்டோ ஓட்டுநர்கள் சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் தடுப்பதாக கூறி நான்கு ஆட்டோ ஓட்டுநர்கள் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நீதி கேட்டு பதாகைகளை ஏந்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ஏற்கனவே இது குறித்து ஆர்டிஓ மற்றும் துடியலூர் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்கனவே ஒருமுறை மனு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.



இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால் இரண்டாவது முறையாக கடந்த சில தினங்களுக்கு முன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அந்த ஆட்டோ ஓட்டுநர்கள் தீக்குளிக்க முயன்றதாகவும், காவல்துறையினர் அவர்களை அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்தனர்.

தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தும் இதுவரை தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று கூறும் ஆட்டோ ஓட்டுநர்கள், அப்பகுதியில் தொடர்ந்து தங்களை சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் ஆட்டோ ஓட்டுவதற்கு அங்குள்ளவர்கள் தடுப்பதாக கூறி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் நீதி கேட்டு பதாகைகளை ஏந்தி ஆட்டோ ஓட்டுநர்கள் மனு அளித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...