கோவையில் தூய்மை பணியில் ஈடுபட்ட பெண் கவுன்சிலர் - வைரலாகும் வீடியோ!

கோவை வடவள்ளியில் உள்ள பூங்கா மற்றும் தெருக்களில் தூய்மை பணி மேற்கொள்ள மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டும் பணிகள் மேற்கொள்ளப்படாததால், 38வது வார்டு அதிமுக கவுன்சிலரான ஷர்மிளா சந்திரசேகர், தானே முன்வந்து தூய்மை பணியில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



கோவை: கோவை மாநகராட்சியிடம் பலமுறை புகார் தெரிவித்தும் தூய்மை பணியை மேற்கொள்ளப்படாததால், பெண் கவுன்சிலர் ஷர்மிளா சந்திரசேகர், தானே களத்தில் இறங்கி தூய்மை பணியில் ஈடுபட்டார்.

கோவை மாநகராட்சி பகுதியான வடவள்ளி பகுதியில் உள்ள பூங்கா மற்றும் தெருக்களில் சரிவர தூய்மை பணி மேற்கொள்ளப்படாமல் இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் 38வது வார்டு அதிமுக கவுன்சிலரான ஷர்மிளா சந்திரசேகரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு, கவுன்சிலர் தூய்மை பணி மேற்கொள்ள தெரிவித்தும் எந்த விதமான பணியும் நடைபெறவில்லை என கூறப்படுகிறது. பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் கவுன்சிலர் ஷர்மிளா தானே இறங்கி தூய்மை பணியை மேற்கொள்ள திட்டமிட்டார்.



அதன்படி முதற்கட்டமாக வடவள்ளி பகுதியில் கோவை மாநகராட்சிக்கு சொந்தமான க்ரியோ கார்டன் பார்க் புதர்களாக காட்சியளித்து சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ள நிலையில், இதனை சுத்தம் செய்யும் வகையில் பெண் கவுன்சிலர் ஷர்மிளா புதர்களை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.



இதனையறிந்த அப்பகுதி மக்கள் கவுன்சிலருடன் இணைந்து பணியை மேற்கொண்டனர். கடந்த 2ஆண்டுகளாக பூங்காக்கள் பராமரிக்கப்படாததால் இங்குள்ள பொருட்கள் மாயமானதுடன், மக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.



தற்போது பெண் கவுன்சிலர் ஒருவர் களத்தில் இறங்கி தூய்மை பணி மேற்கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...