அன்னூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த வடமாநில தொழிலாளி பலி

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் நரேஷ் சிங் (25). இவர் கோவை மாவட்டம் அன்னூரில் ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்ததில் நீரில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அன்னூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: அன்னூர் அருகே போதையில் கிணற்றில் தவறி விழுந்ததில் வடமாநில தொழிலாளி நீரில் முழ்கி உயிரிழந்தார். மகாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்தவர் நரேஷ் சிங் (25). இவர் கோவை மாவட்டம் அன்னூர் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று இவர் வேலை முடிந்ததும் தனது அறைக்கு சென்றார். பின்னர் நரேஷ் சிங் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்தார். போதை தலைக்கேறிய நிலையில் தள்ளாடிய படி வெளியே சென்றார்.

அப்போது இருட்டில் 100 அடி ஆள கிணற்றில் நிலைதடுமாறி உள்ளே விழுந்தார். கிணற்றில் 40 அடி ஆழத்துக்குத் தண்ணீர் இருந்தது. நரேஷ் சிங்கிற்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். மறுநாள் காலையில் அவரை அவரது நண்பர்கள் தேடினர்.

அப்போது நரேஷ் சிங் கிணற்றில் பிணமாக மிதப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

கிணற்றில் தவறி விழுந்து இறந்த நரேஷ் சிங்கின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...