கோவையில் அரசு பொருட்காட்சி - ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

கோவையில் 45 நாட்களுக்கு அரசு பொருட்காட்சி நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


கோவை: கோவையில் 45 நாட்களுக்கு நடைபெறவுள்ள அரசு பொருட்காட்சி நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவையில் 45 நாட்களுக்கு அரசு பொருட்காட்சி நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், இந்தாண்டு அரசு பொருட்காட்சி கோவை மாநகராட்சி சிறை சாலை அணிவகுப்பு மைதானத்தில் ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்கப்பட்டு 45 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது.

இந்தப் பொருட்காட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை, வருவாய்த்துறை, சமூக நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, வனத்துறை உட்பட 27 அரசு துறைகளுக்கு தங்கள் துறையின் மூலம் செலுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வண்ணம் அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.

மேலும், தமிழ்நாடு மின்சாரம் வாரியம் கோவை மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட 7 அரசு சார்பு நிறுவனங்களும் இப்பொருட்காட்சியில் கண்காட்சி அரங்குகளை அமைக்க உள்ளது. இப்பொரு காட்சியில் சிறப்பாக அரங்குகள் அமைக்கும் துறைகளின் அரங்குகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் வழங்க உள்ளனர், என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...