கோவை தெற்கு, மத்திய மண்டலங்களில் வளர்ச்சி பணிகள் - மாநகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு!

கோவை தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர் பிரதாப், பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோவை தெற்கு, மத்திய மண்டலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



கோவை தெற்கு மண்டலம்‌, வார்டு எண்‌.92க்கு உட்பட்ட செந்தமிழ்‌ நகர்‌ SBM திட்டத்தின் கீழ்‌ ரூ.25 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதிதாக கட்டப்பட்டு வரும்‌ மாநகராட்சி பொது கழிப்பிட கட்டுமான பணியை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்‌.



கோவை தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.93க்கு உட்பட்ட இடையர்பாளையம்‌ பகுதியில்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10.5 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதிதாக கட்டப்பட்டு வரும்‌ அங்கன்வாடி மைய கட்டிடத்தை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோவை தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.95க்குட்பட்ட என்‌.பி.இட்டேரி 9வது வீதி, மாநகராட்சி நடுநிலை பள்ளியில்‌ ரூ.63.50 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டு வரும்‌ கூடுதல்‌ வகுப்பறைகள்‌ கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.



கோவை தெற்கு மண்டலம் வார்டு எண்‌.95க்கு உட்பட்ட என்‌.பி.இட்டேரி 9வது வீதியில்‌ புதிதாக கட்டப்பட்டு பயன்பாட்டில்‌ உள்ள அங்கன்வாடி மையத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு குழந்தைகளுடன்‌ கலந்துரையாடினார்‌.



தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண்‌.77 சொக்கம்புதூர்‌ பகுதியில்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.13 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டு வரும்‌ அங்கன்வாடி மைய கட்டிடத்தை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ நேரில்‌ ஆய்வு மேற்கொண்டார்.



கோவை மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.32க்கு உட்பட்ட சங்கனூர்‌, ஆர்‌.ஜி.நகர்‌, தயிர்‌ இட்டேரி ஆகிய பகுதிகளில்‌ மாநகராட்சி தூய்மைப்‌ பணியாளர்கள்‌ மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம்‌ பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின்னர் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்காத குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம் பிரித்து கொடுக்க விழிப்புணவு ஏற்படுத்திட வேண்டும் என தூய்மை பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்‌.



அதனைத்‌ தொடாந்து, மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.32க்கு உட்பட்ட சாய்பாபா காலனி, கண்ணப்பன்‌ நகர் ரயில்வே பாலத்தின்‌ கீழ்‌ பகுதியில்‌ சாலை ஓரங்களில்‌ கொட்டப்பட்டுள்ள குப்பைகளை மாநகராட்சி ஆணையாளர்‌‌, நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் உடனடியாக குப்பைகளை அகற்றி, தெருக்களில்‌ கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணிக்கவும்‌, சாலையோரங்களில்‌ குப்பை கொட்டுவதை தவிர்க்க விழிப்புணர்வு பதாகைகள்‌ வைக்கவும்‌, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...