கோவையில் ஜெர்மன் தொழில்நுட்ப திடக்கழிவு, கழிவுநீர் மேலாண்மை பயிற்சி முகாம் - மாநகராட்சி ஆணையர் துவங்கி வைத்தார்!

கோவை‌ மாநகராட்சியில் ஜெர்மன்‌ சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன்‌ இணைந்து (GIZ) SUDSC-II திட்டத்தின் கீழ்‌ கோவை மாநகரத்தில்‌ திடக்கழிவு மேலாண்மை, கழிவு நீர்‌ மேலாண்மை குறித்த URBAN LAB என்ற பயிற்சி முகாமினை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ இன்று தொடங்கி வைத்தார்.


கோவை: கோவையில் ஜெர்மன் நிறுவனத்துடன் இணைந்து திடக்கழிவு, கழிவுநீர் மேலாண்மை குறித்து பயிற்சி முகாமை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ தொடங்கி வைத்தார்.

கோவையில்‌ தனியார்‌ தங்கும்‌ விடுதி கூட்டரங்கில்‌ கோவை‌ மாநகராட்சி, ஜெர்மன்‌ சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன்‌ இணைந்து (GIZ) SUDSC-II திட்டத்தின் கீழ்‌ கோவை மாநகரத்தில்‌ திடக்கழிவு மேலாண்மை, கழிவு நீர்‌ மேலாண்மை குறித்த URBAN LAB என்ற பயிற்சி முகாமினை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப் தொடங்கி வைத்தார்‌.

இப்பயிற்சி முகாமினை மாநகராட்சி ஆணையாளர்‌ அவர்கள்‌ தொடங்கி வைத்து தெரிவித்ததாவது,



கோவை மாநகராட்சி மற்றும்‌ ஜெர்மன்‌ சர்வதேச ஓத்துழைப்பு நிறுவனத்துடன்‌ இணைந்து (GIZ) SUDSC-II திட்டத்தின் கீழ்‌ CHALLENGE LAB என்ற பயிற்சி முகாம்‌ செயல்படுத்தப்பட உள்ளது.

கோவை‌ மாவட்டம்‌ தமிழ்நாட்டில்‌ மிக முக்கிய வளர்ந்து வரும்‌ மாவட்டங்களில்‌ ஒன்றாகும்‌. கோயம்புத்தூரில்‌ நகர்ப்புற கட்டமைப்பு வளர்ச்சியானது நன்றாக உள்ளது. இங்குள்ள முக்கிய பிரச்சனைகளில்‌ ஒன்றாக திடக்கழிவு மேலாண்மை உள்ளது.

கோவையில் திடக்கழிவுகள்‌ அதிகளவில்‌ தேங்குவதால்‌ அவற்றை வெளியேற்றுவதில்‌ பல்வேறு பிரச்சனைகள்‌ உள்ளன. அதேபோல்‌ குப்பைகளை தேக்கி வைக்க போதிய நிலங்கள்‌ பற்றாக்குறையாக உள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்‌ தினசரி சேகரமாகும்‌ குப்பைகளின்‌ அளவு 1200 முதல்‌ 1300 டன்‌ உள்ளது. இவற்றில்‌ 500 முதல்‌ 600 டன்‌ வரையிலான குப்பைகள்‌ மட்டுமே முறைப்படுத்தப்படுகின்றன.

மேலும்‌, பொதுமக்களிடம்‌ NIMBY Syndrome (Not in My Back Yard)குப்பைகள்‌ தங்களது வீட்டின்‌ அருகிலோ அல்லது இடத்தின்‌ அருகிலோ இருக்க கூடாது என்ற உணர்வு உள்ளது. இதனால்‌ பொதுமக்கள்‌ குப்பைகளை சேகரிக்கும்‌ இடத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்‌.

வெள்ளலூர்‌ குப்பை கிடங்கில்‌ 17 லட்சம்‌ கியூபிக்‌ மீட்டர் குப்பைகள்‌ சேகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில்‌ 9 லட்சம்‌ கியூபிக்‌ மீட்டர் குப்பைகள்‌ முறையாக அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது. வெள்ளலூர்‌ குப்பை கிடங்கில்‌ 3 மாதங்களில்‌ பசுமை வனம்‌ (Bio Forest) அமைக்க திட்டமிட்டுள்ளோம்‌. விரைவில்‌ அப்பகுதியில்‌ குப்பைகளே இல்லாத நிலையை எட்ட திட்டமிட்டுள்ளோம்‌.

அதேபோல்‌, CNG பிளாண்ட்‌, MRF பிளாண்ட்‌ ஆகிய திட்டங்களுக்கு அரசின்‌ ஓப்புதல்‌ வேண்டி அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. நமது மாநகராட்சியில்‌ திடக்கழிவு மேலாண்மையில்‌ பொதுமக்களிடம்‌ பெறப்படும்‌ குப்பைகளில்‌ 80 சதவீதம்‌ முறைப்படுத்தப்பட்டு உள்ளது.

நுண்ணுயிர்‌ உரம்‌ தயாரிக்கும்‌ மையங்களில்‌ (Micro Composting Center) 3 முதல்‌ 5 டன்‌ வரையிலான மக்கும்‌ குப்பைகள்‌ தனியே பிரிக்கப்பட்டு அவை உரமாக்கும்‌ பணிகள்‌ தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மாநகராட்சி தூய்மைப்‌ பணியாளர்களுக்கு தினசரி வருகையை 2 முறை பதிவு செய்வதற்கு Bio Metric System நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. குப்பைகள்‌ சேகரிக்கும்‌ வாகனங்களில்‌ GPS கருவி பொருத்தப்பட்டு அவற்றின்‌ செயல்பாடுகள்‌ கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல்‌, நுண்ணுயிர்‌ உரம்‌ தயாரிக்கும்‌ மையங்களில்‌ (Micro Composting Center) மொபைல் செயலி (Mobile Application) மூலமாக மக்கும்‌ குப்பைகளின்‌ எடை போன்றவற்றினை டிஜிட்டல்‌ முறையில்‌ கண்காணிக்கும்‌ வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு மாநகராட்சி ஆணையர் பிரதாப் கூறினார்.

இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ஷர்மிளா, செயற்பொறியாளர்‌ முருகேசன்‌, உதவி செயற்பொறியாளர்‌ திருமதி.புவனேஸ்வரி, (GIZ) திட்ட இயக்குநர் தெரசா கொர்பர்‌, மண்டல சுகாதார அலுவலர்கள்‌ குணசேகரன்‌, ராதாகிருஷ்ணன்‌, பரமசிவம்‌, ஆண்டியப்பன்‌, திருமால்‌, சுகாதார ஆய்வாளர்கள்‌ ஜெரால்டு சத்ய புனிதன்‌, சரவணக்குமார்‌, விஜயகுமார்‌, ஜெகநாதன்‌, தனபாலன்‌, மாநகராட்சி அலுவலா்கள்‌ மற்றும்‌ தன்னார்வலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...