தாராபுரம் அருகே அரசு பேருந்து மீது வேன் மோதி விபத்து - வேன் ஓட்டுநர் உட்பட 5 பேர் காயம்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பொன்னமராவதியில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு பேருந்து மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் உட்பட 5 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து தாராபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகிலுள்ள பொன்னமராவதியில் இருந்து கோவை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றது. அந்த பேருந்து தாராபுரம் பஸ் நிலையத்திற்குள் நுழைந்தது.

அப்போது, அந்த வழியாக வந்த வேன் எதிர்பாராத விதமாக அரசு பேருந்தின் பக்கவாட்டில் மோதியது.

இ்ந்த விபத்தில் வேனின் கேபினில் இருந்த டிரைவர் கணேசன் மற்றும் பவுன் ரிச்சர்ட், மணிகண்டன், மதன்குமார் ஆகிய 4 பேரும் காயம் அடைந்தனர்.



உடனே, கேபின் கதவை உடைத்து அவர்கள் 4 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில், அரசு பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவரும் காயம் அடைந்தார். உடனே அவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அங்கிருந்தவர்கள் அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தால், தாராபுரம் பஸ் நிலையத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவம் விபத்து குறித்து அரசு பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் வேன் ஓட்டுநர் கணேசன் ஆகியோரிடம் தாராபுரம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...