தாராபுரத்தில் பவளக்கொடி குழுவின் கும்மியாட்டம் - உற்சாகத்துடன் கண்டு ரசித்த பொதுமக்கள்!

தாராபுரத்தில் பவளக்கொடி குழுவின் 41வது கும்மியாட்ட நிகழ்ச்சியை ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். பாரம்பரிய கலையுடன் பெண்களுக்கு உடற்பயிற்சியையும் வழங்கும் இந்த கும்மியாட்டக் கலையை தாராபுரத்தில் கற்றுக்கொண்ட 67 பெண்கள் தமிழகத்தையே கலக்கி வருகின்றனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றுவட்டார பகுதி கிராமங்களைச் சார்ந்த 7 வயது முதல் 70 வயது கடந்த பெண்கள் தமிழ்நாட்டின் மறைந்து வரும் பாரம்பரிய கலைகளில் ஒன்றான கொங்கு நாட்டு கும்மியாட்டத்தில் தமிழ்நாட்டின் பாரம்பரிய பெருமையை பறைசாற்றி வருகிறார்கள்.

அதிகாலை 5 மணிக்கு எழுந்து குடும்பம் குழந்தை கணவன் என அனைத்து குடும்ப உறுப்பினர்களின் தேவைகளையும் அறிந்து இயந்திரத்தனமாய் மாறிவிட்ட இன்றைய பெண்களுக்கு உடற்பயிற்சி, மன அமைதி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.



இந்த நிலையில் இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், உடற்பயிற்சியுடன் மெல்ல மறைந்து வரும் கிராமிய பாரம்பரிய கலைக்கும் புத்துயிரளிக்கும் ஒரு புதுமைப் பெண்களின் நிகழ்ச்சியாக வள்ளி கும்மியாட்டம், பவளக்கொடி கும்மியாட்டம் போன்ற கலைகளை பயிற்சி பெற்ற பாரம்பரிய கலைஞர்களின் முயற்சியால் பயின்று திருப்பூர் மாவட்டத்தின் சுற்று வட்டார பகுதிகளில் எல்லாம் பழந்தமிழர் பெருமையை பாடலாக பாடி கும்மி ஆட்டமாக ஆடி பறைசாற்றி வருகின்றனர்.



இதுவரை 3600 க்கும் மேற்பட்ட பெண்கள் கும்மி ஆட்டத்தில் பயிற்சி பெற்றுள்ள நிலையில், 41வது நிகழ்ச்சியாக 410 ஆவது மேடையில் அரங்கேற்றம் செய்தனர்.

பழந்தமிழ் பெண்களின் நாகரீகம், பண்பாடு வீரம் இவற்றை பாடலாக வடித்தெடுத்து, கும்மி ஆட்டமாக ஆடிக்காட்டி பார்வையாளர்களை குதூகலத்தில் ஆழ்த்தி வருகிறார்கள் இந்த கும்மியாட்டக்குழு கலைஞர்கள்.



இந்த பவளக்கொடி கொங்கு கும்மியாட்டக் குழுவினரின் நிகழ்ச்சி, தாராபுரம் தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் இரவு மின்னொளியில் கோலாகலமாக நடைபெற்றது. தாள லயம் மாறாமல் பாட்டின் அடிபிறழாமல் கும்மியாட்டத்திற்கான குழு நடனத்தை பெண்கள் அழகாக அரங்கேற்றினர்.



இதனை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...