கோவை அருகே வனப்பகுதியில் காட்டுத் தீ - 8வது நாளில் முழுமையாக அணைத்த வனத்துறை!

கோவை ஆலாந்துறை மேற்குதொடர்ச்சி மலை வனப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்த காட்டுத் தீயை, வனத்துறையினரின் தொடர் போராட்டத்தால் முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது. புகை வரும் பகுதியில் வனத்துறை ஊழியர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவை ஆலாந்துறை அருகே உள்ள மேற்குதொடர்ச்சி மலை வனப்பகுதியில் கடந்த 11 ஆம் தேதி காட்டு தீ பிடித்தது. இதனை தொடர்ந்து, கடந்த 7 நாட்களாக காட்டுத் தீயை அணைக்க மதுக்கரை, கோவை, மேட்டுபாளையம், சிறுமுகை, நீலகிரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட வனச்சரகத்தை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தீவிர பணிகளை மேற்கொண்டனர்.



கூடுதலாக, இராணுவ ஹெலிகாப்டர் மூலம் சுமார் 22 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ஊற்றி பெரிய அளவிலான தீ அணைக்கப்பட்டது. மீதமுள்ள இடங்களில் எரிந்து வந்த காட்டுத் தீயை, நேற்று நள்ளிரவு வனத்துறை ஊழியர்கள் போராடி முழுமையாக அணைத்தனர்.

இதைத் தொடர்ந்து, 8 ஆவது நாளான இன்று புகை ஏற்பட்டுள்ள பகுதிகளில் வனத்துறை ஊழியர்கள் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த 7 நாட்களாக எரிந்த காட்டுத் தீயில், பல ஹெக்டேர் பரப்பளவில் இருந்து மரங்கள், செடிகொடிகள், புற்கள் எரிந்து சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மேற்கு மண்டலத்தில் குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நடைபயணம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.38க்குட்பட்ட கல்வீரம்பாளையம் பள்ளி முதல் பொம்மனாம்பாளையம் கோயில் வரை, குப்பைகள...

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...