வனப் பகுதியில் தொடரும் வறட்சியின் காரணமாக முதுமலை சரணாலயத்தில் பெண் யானை பலி

கடந்த இரு நாட்களுக்கு முன்பு முதுமலை புலிகள் சரணாலயத்திற்குட்பட்ட பகுதியில் உடல்நிலைக் குறைவின் காரணமாக இருந்த காட்டு யானை மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

கோவை மாவட்டத்தில் சமீபகாலமாக மழையின்றி பெரும்பாலான பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது. சரியான மழைப்பொழிவின்றி வனப் பகுதிகளும் தற்போது வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது.

இதில், முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட 321 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு தண்ணீர் இன்றி வனப் பகுதியே வறண்டு காணப்படுகிறது. இதனால் அங்குள்ள வன விலங்குகள் நீரின்றி பெரிதும் தவித்து வருகின்றன. 



இந்நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை ஒன்றி உடல்நிலைக் குறைபாடின் காரணமாக கீழே விழுந்து கிடந்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த முதுமலை புலிகள் சரணாலயம் இயக்குநர் சீனிவாச ரெட்டி, கால்நடை மருத்துவர் விஜயராகவன், வன அலுவலர் ஞானதாஸ் உள்ளிட்ட வன அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று உடல்நிலை குன்றிய அந்த பெண் யானைக்கு முதலுதவி மற்றும் உணவுகளை அளித்தனர்.

தொடர்ந்து அந்த யானையை நிற்கவைக்கும் முயற்சியில் முதுமலை புலிகள் சரணாலயத்தின் கும்கி யானைகளான பொம்மன், ஜான், சந்தோஷ் மற்றும் ஜம்பு ஆகிய யானைகள் வரவழைக்கப்பட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அந்த பெண் காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது.

தொடர்ந்து முதுமலை புலிகள் சரணாலயத்தில் நிலவிவரும் வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக வன விலங்குகளான காட்டு எருமை, யானை, மான், கரடி, புலிகள், சிறுத்தைகள் உள்ளிட்டவை அடர்ந்த வனப்பகுதிகளை நோக்கி இடப்பெயர்ச்சியில் ஈடுபட்டுள்ளன.

இதுகுறித்து கூறிய முதுமனை சரணாலய வன அலுவலர், இனி வரும் காலங்களில் சரியான மழை பெய்யவில்லை எனில் வனப்பகுதிகளில் தற்போது உள்ள சூழலை விட கடுமையான பிரச்சனைகள் ஏற்படும், வன விலங்குகளின் உயிரிழப்புகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...