தாராபுரம் அருகே காரில் 45 கிலோ கஞ்சா கடத்திய இளைஞர் கைது!

திருப்பூர் அருகே தாராபுரம் காரில் 5.50 லட்சம் மதிப்புள்ள 45 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த வாழப்பாடியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் கைது செய்யப்பட்டார். மதுவிலக்கு போலீசார் நடத்திய வாகன சோதனையில் அவர் சிக்கினார்.


கோவை: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மதுவிலக்கு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது டாடா இன்டிகா என்ற வாகனத்தில் வந்த நபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.

அப்போது அவர் முன்னுக்கு பின்னாக பதில் அளித்தார். இதனால், மேலும் சந்தேகம் அடைந்த மதுவிலக்கு காவல்துறையினர், அவரை மதுவிலக்கு காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர்.



அப்போது அவர், காரில் சுமார் 45 கிலோ அளவுள்ள 5.50 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. கஞ்சாவை மொத்தமாக வாங்கி விற்பனைக்காக இவர் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பிடிபட்ட நபர், வாழப்பாடியைச் சேர்ந்த சேகர் மகன் தமிழ்ச்செல்வன் ஆவார். இதையடுத்து, அவரிடமிருந்து டாட்டா இன்டிகா கார் மற்றும் 45 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து காவல்துறையினர் தமிழ்ச்செல்வனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை மேற்கு மண்டலத்தில் குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நடைபயணம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.38க்குட்பட்ட கல்வீரம்பாளையம் பள்ளி முதல் பொம்மனாம்பாளையம் கோயில் வரை, குப்பைகள...

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...