வால்பாறை பழங்குடியினர் குடியிருப்புகளுக்கு நிதியுதவி

வால்பாறை அருகே வனப்பகுதியில் உள்ள 4 பழங்குடியினர் குடியிருப்புகளில் 89 வீடுகளுக்கு உறுதியான கூரை அமைப்பதற்கு, தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து(CSR) ரூ.14.86 லட்சத்திற்கான காசோலை, கோவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.


கோவை: வால்பாறை தாலுகாவில் உள்ள பழங்குடியினர் குடியிருப்புகளில் வீடுகள் கட்டுவதற்கு தனியார் நிறுவனங்கள் இணைந்து நிதி வழங்கின.

கோவை மாவட்டம், வால்பாறை தாலுகாவில் ஆழமான வனப்பகுதியில் உள்ள 4 பழங்குடியினர் குடியிருப்புகளில் உள்ள 89 வீடுகளுக்கு உறுதியான கூரை வீடுகள் அமைப்பதற்கு, தனியார் நிறுவனங்கள் தங்களது சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து(CSR)ரூ.14.86 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடியிடம் வழங்கின.



வால்கரோ இன்டர்நேஷனல் ப்ரைவேட் லிமிட் நிறுவனத்தின் சார்பில் 2.65லட்சம், ஹேமலதா அண்ணாமலை சார்பில் ரூ. 3.30 லட்சம், மெய்நிகர் மீட்புப் படை (VRF) சார்பில் 1.41 லட்சம், டாக்டர் விஜயா சார்பில் ரூ.7.5 இலட்சம் என மொத்தம் ரூ.14.86 லட்சம் வழங்கிய அனைவரையும் மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.

மேலும், இன்னும் மூன்று பழங்குடியின குடியேற்றங்களுக்கு இதுபோன்று கூரைகள் அமைக்க தனியார் நிறுவனங்கள் தங்களுடைய சி.எஸ்.ஆர் நிதியினை அளித்து உதவ முன்வரவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர், வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...