கிணத்துக்கடவு அருகே பாறைக்குழியில் குதித்து 2 பேர் தற்கொலை!

கிணத்துக்கடவு அருகே ஏலூரில் உள்ள பாறைக்குழியில் ஆண், பெண் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. விசாரணையில், இருவரும் சாணிப்பவுடன் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஏலூரில் பாறை குழியில் அதிகளவில் தண்ணீர் தேங்கி உள்ளது.



இந்த பாறைக்குழியில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் உடல் தண்ணீரில் மிதப்பதாக அந்த பகுதி மக்கள் கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.



தகவல் அறிந்து வந்த கிணத்துக்கடவு போலீசார் உடனடியாக கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.



சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரில் இருந்து மிதந்து கிடந்த இரண்டு உடல்களையும் கயிறு கட்டி மீட்டனர்.



உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், இருவரும் சாணி பவுடர் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.

உயிரிழந்த ஆணின் வயது 60 ஆகவும், பெண்ணின் வயது 50 வயது ஆகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...