கோவை துடியலூரியில் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் இலவச நீர், மோர் பந்தல் திறப்பு!

கோடை காலத்தில் துடியலூர் அடுத்த அசோகபுரம் பகுதியில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் தாகத்தை தணிப்பதற்காக அசோகபுரம் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் நீர் மோர் பந்தல் இன்று திறக்கப்பட்டது. இதில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நீர், மோர் குடித்து தாகத்தை தணித்துக் கொண்டனர்.



கோவை: துடியலூரை அடுத்த அசோகபுரம் பகுதியில் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் இலவச நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது.



கோடை வெயிலில் வெப்பத்தை தவிர்க்க ஆண்டுதோறும் அசோகபுரம் பகுதி பொதுமக்களுக்கு அசோகபுரம் நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இலவச நீர், மோர் வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல் இந்த ஆண்டும் அசோகபுரம் நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக இலவச நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது.



இதில் அப்பகுதி பொதுமக்கள், வாகனங்களில் செல்வோர் என நீர், மோர் அருந்தி தங்களது தாகத்தை தணித்துக் கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் சிவகுமார், செயலாளர் சுந்தர்ராஜ், பொருளாளர் சண்முகசுந்தரம், உறுப்பினர்கள் அசோக் குமார், ரவிச்சந்திரன், விஸ்வநாதன், விஜயன், மோகன் குமார், நவநீதகிருஷ்ணன், பிரதாப், பிரேம்குமார், சங்கர், கனகராஜ், வடிவேல், பிரதீப் ராஜ், வீரா, தீனதயாளன், புஷ்பராஜ், சம்பத்குமார், பாலமுருகன், ஹரிஹரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...