கோவைப்புதூர் அருகே டிப்பர் லாரி மோதிய விபத்தில் 7 மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சோகம்!

கோவைப்புதூர் அருகே ஜல்லிக்கற்களை ஏற்றிக் கொண்டு அதிவேகமாக சென்ற டிப்பர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் மோகன பிரியா என்ற 7 மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவைப்புதூர் அருகே ஜல்லிக்கற்கள் ஏற்றிச்சென்ற டிப்பர் லாரி மோதிய விபத்தில் 7 மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார் (31). தனியார் நிறுவன ஊழியர். இவர் கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியை சேர்ந்த மோகனப்பிரியா (29) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மோகனப்பிரியா மற்றும் மனோஜ்குமார் ஆகிய இருவரும் தற்போது கோவையில் வசித்து வந்தனர். மோகனப்பிரியா தனியார் வங்கியில் பணியாற்றி வந்த நிலையில், 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

மோகனபிரியாவை, தினமும் அவரது கணவர் மனோஜ்குமார் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு அழைத்துச் சென்று வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் மனோஜ்குமார் தனது மனைவி மோகனபிரியாவை அழைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்றார்.

அப்போது கோவைப்புதூர் பிரிவு அருகே வந்த போது பின்னால் அதிவேகமாக ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த டிப்பர் லாரி ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து மனோஜ்குமார் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த மோகனப்பிரியா, லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இந்நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மோகனப்பிரியாவை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மோகனப்பிரியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிவேகமாக லாரியை ஒட்டி வந்து விபத்து ஏற்படுத்திய மாதம்பட்டியை சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலமுரளி கிருஷ்ணா (36) என்பவரை கைது செய்தனர்.

கூடுதல் பாரத்துடன் வாகனங்களை இயக்கினாலோ, அதி வேகமாக வாகனங்களை இயக்கினாலோ கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...