கோவை சரவணம்பட்டியில் குடிபோதையில் காருக்குள்ளேயே உயிரிழந்த இளைஞர் - போலீசார் விசாரணை

கோவை சரவணம்பட்டி அடுத்த கீரணத்தம் பகுதியில் மது போதையில் வசந்தகுமார் என்பவர் காருக்குள்ளேயே மூக்கில் ரத்தம் வழிந்தபடி உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: சரவணம்பட்டி அருகே கீரணத்தம் பகுதியில் இளைஞர் ஒருவர் குடிபோதையில் காருக்குள்ளேயே உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள கீரணத்தம் பகுதியை சேர்ந்தர்கள் வசந்தகுமார் - சுகந்தி தம்பதி. இந்நிலையில், வசந்தகுமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனிடையே நேற்றைய தினம் வசந்தகுமார் நண்பரை சந்தித்து வருவதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார்.

நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், மனைவி சுகந்தி போன் செய்துள்ளார். ஆனால் வசந்தகுமார் போனை எடுக்காததால் சந்தேகமடைந்து தேடிச் சென்றுள்ளார். அப்போது கீரணத்தம் டாஸ்மாக் அருகே காருக்குள் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் மயங்கிக் கிடந்துள்ளார்.

உடனடியாக அவரை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...