கோவையில் தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் பேட்டரிகள் திருட்டு - மர்ம நபர்கள் கைவரிசை!

நல்லாம்பாளையம் அடுத்த சங்கனூர் சாலையில் உள்ள சிட்டி யூனியன் வங்கி ஏ.டி.எம் மையத்தில் இருந்த யூபிஎஸ் பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டதாக வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: நல்லாம்பாளையம் அருகே தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் இருந்த பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நல்லாம்பாளையத்தை அடுத்த சங்கனூர் சாலையில் சிட்டி யூனியன் வங்கியின் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம் அறையில் இருந்த சுமார் ரூ.6,000 மதிப்புள்ள யூ.பி.எஸ் பேட்டரியை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த வங்கி மேலாளர் அரவிந்த், சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இதனிடையே இந்த ஏ.டி.எம் மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...