கோவை டாஸ்மாக் கடை அருகே தொழிலாளியை வெட்டிக் கொன்ற இளைஞர் கரூரில் கைது…!

செல்போன் காணாமல் போனது குறித்த தகராறில் கோவை குனியமுத்தூர் டாஸ்மாக் கடை முன்பு ரஹ்மத்துல்லாவை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு தப்பியோடி தலைமறைவான சந்தோஷ் என்ற நபரை போலீசார் கரூர் அருகே கைது செய்துள்ளனர்.


கோவை: குனியமுத்தூர் அருகே டாஸ்மாக் கடை முன்பு ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் கரூர் அருகே கைது செய்துள்ளனர்.

கோவை குனியமுத்தூர் பாரதி நகரை சேர்ந்தவர் பெயிண்டர் ரகுமத்துல்லா (29). இவரது மனைவி தஸ்லிமா. இந்த தம்பதியினருக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.

இந்நிலையில், ரகுமத்துல்லா மீது வழிப்பறி, செல்போன் திருட்டு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. நேற்று இரவு ரகுமத்துல்லா செல்வபுரம் பேரூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாருக்கு தனது நண்பர் மணிகண்டன் (23) என்பவருடன் சென்று மது அருந்தி கொண்டிருந்தார்.

அப்போது அவர்களது அருகே செல்வபுரம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (26) என்பவர் தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தோஷின் நண்பர் ஒருவரது செல்போன் காணாமல் போனது.

இந்த செல்போனை ரகுமத்துல்லா எடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் சந்தோஷ் அவரிடம் கேட்டு வாக்குவாதம் செய்தார். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் பாரில் இருந்து வெளியே வந்த ரகுமத்துல்லாவை ஆத்திரம் அடைந்த சந்தோஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வயிற்றில் குத்தியுள்ளார்.

தடுக்க முயன்ற மணிகண்டனுக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த ரகுமத்துல்லா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். பின்னர் சந்தோஷ் தப்பியோடியதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து செல்வபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் காயம் அடைந்த மணிகண்டன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து செல்வபுரம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து சந்தோஷை தேடி வந்தனர். இந்நிலையில் கரூரில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்து, பின்னர் கோவை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...