கோவை மயிலேரிபாளையத்தில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு!

கோவை மயிலேரிபாளையம் ஊராட்சியில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. திமுக தெற்கு மாவட்ட தலைவர் தளபதி முருகேசன், மரக்கன்றுகளை நட்டு இந்த பணியை தொடக்கி வைத்தார்.


கோவை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின் 70 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் துவங்கியுள்ளது.



முதல்கட்டமாக மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் மயிலேரிபாளையம் ஊராட்சியில் சுமார் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. திமுக தெற்கு மாவட்ட தலைவர் தளபதி முருகேசன் இந்த பணிகளை மரக்கன்றுகளை நடவு செய்து துவங்கி வைத்தார்.



ஊராட்சி ஊழியர்கள், தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் இணைந்து வேப்பை, மாமரம், கொய்யா உள்ளிட்ட ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்தனர்.

இது குறித்து திமுக மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் கூறுகையில்,

கலைஞர் நூற்றாண்டு மற்றும் முதல்வர் 70 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகளை நடவு செய்ய உள்ளோம். இந்த மரக்கன்றுகளை அந்தந்த ஊராட்சி, பேரூராட்சி நிர்வாகத்தினர் வேலிகள் அமைத்தும், தண்ணீர் ஊற்றியும் பராமரிக்க உள்ளனர்.

மேலும் கோவை தெற்கு மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகளை அடுத்தடுத்து நடவு செய்யும் பணிகளை கட்சி நிர்வாகிகள், தன்னார்வலர்கள் மூலம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.



இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் கே.கே.செந்தில்குமார், மயிலேரிபாளையம் ஊராட்சி தலைவர் கோமதி திருமூர்த்தி, ஊராட்சி செயலாளர் பி.திருமூர்த்தி, ஊராட்சி துணை தலைவர் என்.சுப்பிரமணியம், மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...