கழிவறை வசதி கோரும் பழங்குடியின மக்கள் - கோவை மாநகராட்சி குறைதீர்ப்புக்கூட்டத்தில் மனு!

கோவை மாநகராட்சியில் நடைபெற்ற குறைதீர்ப்புக் கூட்டத்தில் 97வது வார்டு பகுதிக்குட்பட்ட பழங்குடியின மக்கள் மனு அளித்தனர். அதில், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.


கோவை: கோவை மாநகராட்சியின் குறைதீர்ப்புக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி வார்டு எண்.97க்கு உட்பட்ட குறிச்சி, கொண்டி நகர் பகுதியைச் சேர்ந்த ஆண்ட்ரூ என்பவர் மக்கள் நீதிமய்யம் சார்பில் மனு ஒன்றை அளித்தார்.



அதில்,2000க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில், 40 கழிப்பறைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளதாகவும், குப்பைகளைக் கொட்டபோதிய குப்பை தொட்டிகள் இல்லை எனவும் குற்றச்சாட்டியிருந்தார்.



மேலும், குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றிலும் கழிவுகள் முறையாக அகற்றப்படாததால் தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கழிவுநீர் கால்வாய்களும் இதுவரை அப்பகுதியில் அமைக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தப் பகுதியில் நகர்ப்புற சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையம் அமைப்பதற்கான திட்டமிடல்கள் நடைபெற்றுவருகிறது.



இந்தப் பணிகளைத் தொடங்கும் முன் இப்பகுதிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவு செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மனுவைப் பெற்றுக்கொண்ட மாநகராட்சி ஆணையர், கோரிக்கை தொடர்பாக, அப்பகுதியில் மாநகராட்சி குழு ஆய்வு நடத்திஉரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

மேலும், நகர்ப்புற சுகாதார மையத்தின் கட்டுமானத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை குடியிருப்பாளர்கள் ஒரு வழித்தடமாக மாற்றியிருப்பதாகவும் மாநகராட்சி ஆணையர் அப்போது தெரிவித்தார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...