பல்லடத்தில் இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி - தலைக்கவசம் அணியும்படி வலியுறுத்தல்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கட்டாய தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தி நடைபெற்ற இரு சக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகர் பகுதியில் நாளுக்குநாள் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால் வாகன விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.



இந்நிலையில், பல்லடம் போக்குவரத்து காவல்துறை மற்றும் மோட்டார் வாகன பழுது பார்ப்போர் நல சங்கம் ஆகியோர் இணைந்து தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகன விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.



பல்லடம் நால்ரோட்டில் இருந்து செட்டிபாளையம் பிரிவு வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை பல்லடம் போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் அண்ணாதுரை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



இதில், தலைக்கவசம் அணிந்தபடி நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று இருசக்கர வாகனத்தில் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு பேரணியாக சென்றனர். அப்போது, தலைக்கவசம் அணிவது அவசியம் எனவும், தலைக்கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும்ம் பொது மக்களிடையே அவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...