உடுமலை அருகே மக்கள் தொடர்பு முகாம் - மலைவாழ் மக்களின் மனுக்களுக்கு தீர்வு!

உடுமலை அடுத்துள்ள சின்னக்கல்லார் மலைவாழ் மக்கள் குடியிருப்புப் பகுதியில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இந்த முகாமில், ஆதார் அட்டை திருத்தம், ஸ்மார்ட்ரேஷன்அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ் உள்ளிட்டவை தொடர்பான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில், உடுமலை, அமராவதி, வந்தரவு, கொழுமம் ஆகிய வனச்ச ரகங்கள் உள்ளன.

இதில், 18க்கும் மேற்பட்ட மலை வாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள், தங்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் இதர பிரச்னைகளுக்கு தீர்வு கிடைப்பதில்லை என தெரிவிக்கின்றனர்.

மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், புதிய திட்டமாக, அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்கும், மலைவாழ் மக்கள் தொடர்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டது இத்திட்டத்தின்கீழ் சின்னார் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் முகாம் நடந்தது.



கோட்டாட்சியர் ஜஸ் வந்த் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், தாசில்தார் கண்ணாமணி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விவேகானந்தன், குடிமைபொருள் தாசில்தார் கார்த்திகேயன், உடுமலை பி.டி.ஓ., சுப்ரமணியம், எரிசனம் பட்டி முதன்மை சுகாதார நிலையம் மருத்துவ அலுவலர் டாக்டர் உமாராதிராணி, வனச்சரகர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.



இந்த முகாமில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு, முதியோர் உதவி தொகை, ஆதார் அட்டை திருத்தம், பிறப்பு, இறப்பு சான்று, வாக்காளர் அட்டையுடன் அடையாள ஆதார் எண் இணைத்தல் உள்ளிட்டவை தொடர்பான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தீர்வு காணப்பட்டது. மேலும், டாக்டர்கள், செவிலியர்கள் பங்கேற்ற, சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, மலைவாழ் மக்களுக்கு சிகிச்சையும் வழங்கப்பட்டது.

வனத்துறை சார்பில், வனத்தீ ஏற்படாமல் பாதுகாத்தல் மற்றும் தடுப்பதற்கான விழிப்புணர்வு பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், 300க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...