மாதத்தவணையில் வீட்டுமனை தருவதாக பல லட்சம் மோசடி - கோவை காவல் ஆணையரிடம் புகார்

கோவையில் மாத தவணையில் பணம் கட்டுபவர்களுக்கு வீட்டுமனை தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.


கோவை: கோவை மாநகரை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அதில், கோவை ஆர்.எஸ்.புரம் திருவேங்கடசாமி ரோட்டில் செயல்பட்டு வரும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை, கணவன் - மனைவியான கோவிந்தராஜ், ராஜலட்சுமி ஆகியோர் நடத்தி வந்தனர்.



இவர்கள் மாத தவணையில் பணம் செலுத்தினால் வீட்டுமனை விற்பனை செய்யப்படும் என கவர்ச்சிகரமான பல அறிவிப்புகளை வெளியிட்டதை, நம்பி கோவையை சேர்ந்த ஏராளமானோர் கடந்த 2010ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை மாதம் தோறும் ரூ.2000, ரூ.2750 என பணம் செலுத்திவந்தனர்.



ஒவ்வொருவரும் மொத்தமாக தலா ரூ.2 லட்சம், ரூ. 3 லட்சம் என பணம் செலுத்தியுள்ளனர். ஆனால், முழு தொகையை செலுத்திய பின்னரும் வீட்டுமனையை கிரையம் செய்து கொடுக்காமல் ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர்கள் பொதுமக்களை ஏமாற்றிவிட்டதுடன், பணத்தை திரும்ப கேட்டபோது பணம் கொடுக்காமல் மிரட்டியதால் காவல் துறையில் புகார் அளித்ததாக தெரிவித்தனர்.



மிகுந்த சிரமத்திடையே மன உளைச்சலுடன் இருந்து வருவதால், பணம் வசூல் செய்து லட்சக்கணக்கில் ஏமாற்றிய ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்திய தம்பதி மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...