வால்பாறையில் ஆட்சியர் தலைமையில் மக்கள் குறை தீர்ப்பு முகாம்

வால்பாறையில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் 133 பயனாளிகளுக்கு ரூ.24.59 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டது. மேலும் INTUC கட்சி செயலாளர் பரமசிவன் பிச்சை எடுப்பவர் போல் வேடம் அணிந்து வந்து ஆட்சியரிடம் மனு அளித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: வால்பாறையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற குறைதீர்க்க முகாமில் ஒருவர் பிச்சை எடுப்பது போல் வேடம் அணிந்து மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள சமுதாய திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. காலை 10:30 மணி அளவில் நடைபெற்ற இந்த முகாம் நிகழ்ச்சியில் பல்வேறு அரசு துறையினர் அதிகாரிகள், பொள்ளாச்சி சார் ஆட்சியர், மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் 133 பயனாளிகளுக்கு 24 லட்சத்து 59 ஆயிரத்து 745 ரூபாய் நிவாரண தொகையாக வழங்கப்பட்டது.



மேலும் இந்த முகாமில் 270 மனுக்கள் பெறப்பட்டன. ஏற்கனவே பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

வால்பாறையில் உள்ள மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட உடும்பன்பாறை, கல்லார்குடி, பரமன் கடவு, பாலக்கினார், சின்கோனா, சங்கரன்குடி, வால்பாறை வனச்சரத்துக்கு உட்பட்ட நெடுங்குன்றம், ஆகிய ஏழு ஆதிவாசி பழங்குடியினர் கிராமங்களுக்கு சமுதாய உரிமை வழங்கப்பட்டது.



மேலும் பொது மக்களுக்கு தையல் மெஷின், விவசாய பொருட்கள் தாட்கோ லோன் குடும்ப அட்டை மாற்றுத்திறனாளிகளின் உபகரணங்கள் போன்றவை வழங்கப்பட்டது.



இதே நிகழ்வில் INTUC கட்சி செயலாளர் பரமசிவன் பிச்சை எடுப்பவர் போல் வேடம் அணிந்து வந்து ஆட்சியரிடம் நூதன முறையில் மனு கொடுத்தார். அந்த மனுவில் வால்பாறை பகுதியில் உள்ள தேயிலை தோட்டம் தொழிலாளர்களுக்கு சம்பள பிரச்சினை இருப்பதாகவும், அதற்கு தீர்வு கிடைக்க வேண்டும்.

தொழிலாளர்கள் கோவை பகுதியில் உள்ள பிராட்மன்ட் அலுவலகத்திற்கு சென்று அவர்களை அலுவலர்கள் அலைக்கழிப்பதால் வால்பாறையில் வங்கிகள் மூலம் மாதம்தோறும் மக்கள் முகாம் நடைபெற வேண்டும். மேலும் மின்சார வாரியத்திற்கு சொந்தமாக இடம் வழங்கப்பட்டு கட்டிடம் கட்ட வேண்டும். இவ்வாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

இதேபோல், தற்போது வால்பாறையில் நடைபாதை சாலை விரிவாக்கத்தால் நடைபாதை கடைகள் அகற்றப்பட்டது. அதற்கு புதிய இடம் வழங்க வேண்டும். வால்பாறை பகுதியை சுற்றுலா தளம் ஆக்கவும் கிடப்பில் இருக்கும் படகு இல்லம் தாவரவியல் பூங்கா, சாலை வசதி போன்ற பணிகளை செய்து தர வேண்டும். நகர மன்ற துணைத் தலைவர் செந்தில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்நிகழ்ச்சியில் வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் தாமா செந்தில்குமார், நகராட்சி தலைமை பொறியாளர் வெங்கடாசலம் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...