உடுமலை அருகே குடிமங்கலத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு - கிராம மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை!

குடிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மூங்கில்தொழுவு, அனிக்கடவு, வாகத்தொழுவு, கொசவம்பாளையம் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக முறையான குடிநீர் விநியோகம் இல்லாத நிலையில், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனுவை அளித்தனர்.


திருப்பூர்: உடுமலை அடுத்த குடிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க கோரி பொது மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மூங்கில்தொழுவு, அனிக்கடவு, வாகத்தொழுவு, கொசவம்பாளையம் பகுதிகளை சேர்ந்த மக்கள், திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.



அந்த மனுவில் கூறியிருப்பதாவது,

எங்கள் பகுதியில் கடந்த 30 நாட்களுக்கு மேலாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய உதவி பொறியாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரி ஆகியோரிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

திருமூர்த்தி மலை கீழ்மட்ட தொட்டியில் மின் மோட்டாரை சரி செய்ய போதிய பணம் இல்லை என கூறிவிட்டனர். ஏற்கனவே ஆட்சியரிடம் முறையிட்டுள்ளோம். குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினையை சரி செய்து தரப்படும் என்று தெரிவித்தீர்கள். இன்றுவரை அரசு அதிகாரிகளிடம் இருந்து நடவடிக்கை இல்லை.

எனவே கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், மேற்கண்ட ஊராட்சிகளில் உள்ள மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...