திருப்பூரில் மருத்துவம் பயிலாமல் சிகிச்சையளித்து வந்த போலி மருத்துவர் கைது!

திருப்பூர் அடுத்த கரட்டாங்காடு பகுதியில் மருத்துவம் பயிலாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த அண்ணாதுரை என்பவரை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.



திருப்பூர்: திருப்பூர் அருகே முறையாக மருத்துவம் பயிலாமல் சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் அடுத்த கரட்டாங்காடு பகுதியில் முறையான அனுமதி பெறாமல் மருத்துவமனை செயல்பட்டு வருவதாகவும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத்திற்கு புகார்கள் வந்துள்ளன.



இதனை தொடர்ந்து புகார்கள் தொடர்பாக தீவிரமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் பேரில் சுகாதார பணிகள் இணை இயக்குநர் கனகராணி தலைமையிலான அதிகாரிகள் கரட்டாங்காடு பகுதியில் செயல்பட்டு வந்த (கிளினிக்) மருத்துவமனையில் ஆய்வு செய்தனர்.



அப்போது கடந்த 2019ஆம் ஆண்டு வேறு ஒருவர் பெயரில் பெற்ற உரிமத்தை கொண்டு அண்ணாதுரை என்பவர் சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. மேலும் ஆயுர்வேத மருத்துவம் படித்து விட்டு அலோபதி மருத்துவம் பார்ப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து உரிய அனுமதியின்றி செயல்பட்ட மருத்துவமனைக்கு கடந்த 13ம் தேதி அதிகாரிகள் சீல் வைத்தனர்.



இதனை தொடர்ந்து மருத்துவம் பார்த்து வந்த அண்ணாதுரையிடம் மாவட்ட சுகாதார பணிகள் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டதில் அவர் ஆயுர்வேதம் பயிலாமல் மருத்துவம் பார்த்ததும் அவர் வைத்திருந்த சான்றுகள் அனைத்தும் தமிழ்நாடு சித்த மருத்துவ கழகத்தில் பதிவு செய்ய இயலாது என தெரியவந்தது.

மேலும் சுகாதார துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் போலி மருத்துவர் அண்ணாதுரையை திருப்பூர் தெற்கு போலீசார் கைது செய்தனர்.

மருத்துவம் பயிலாமல் சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிறிய அளவில் நடத்தப்படும் மருத்துவமனைகளை முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...