போலி நகைகளை அடகு வைத்து ரூ.81 லட்சம் மோசடி - வங்கி மேலாளர் உட்பட 3 பேர் கைது!

திருப்பூர் - அவிநாசி சாலையில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில் வாடிக்கையாளர்கள் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து, ரூ. 81 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்ட வங்கி மேலாளர், துணை மேலாளர் உள்பட மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.81 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்ட வங்கி மேலாளர் உட்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் - அவிநாசி சாலையில் தனியார் வங்கியில் (பெட் பேங்க், வங்கி சாரா நிதி நிறுவனம்) செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில், வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகையை மீட்கும் போது அதே வாடிக்கையாளர் பெயரில் போலியாக நகைகளை அடகு வைத்து 81 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆண்டு கணக்கு தணிக்கையின் போது ரூ.81 லட்சம் மோசடி செய்யப்பட்டதை கண்டறிந்த மண்டல மேலாளர் சரண் சிவகுமார் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.



இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மோசடியில் ஈடுபட்ட வங்கி மேலாளர் சிவா, உதவி மேலாளர் பிரபு மற்றும் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் விஸ்வநாதன் ஆகிய மூன்று பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

போலி நகைகளை அடகு வைத்து 81 லட்சம் ரூபாய் மோசடி செய்த மேலாளர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...