கோவையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் மாவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும், இறந்த சாலை பணியாளர்கள் 300-க்கும் மேற்பட்டோரின் குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்கிட வேண்டும்,

சாலைப் பணியாளர்கள் காலியிடங்களை நிரப்பி இளைஞர்களுக்கு வேலை வழங்கிட வேண்டும், அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும், அகவிலைப்படி நிலுவை, சரண் விடுப்பு சம்பளங்களை வழங்கிட வேண்டும், பொங்கல் போனஸ் பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும், கோவை கோட்டத்தில் திறன்மிகு உதவியாளர், இரண்டாம் நிலை அலுவலர்கள், உதவியாளர், இரவு காவலர் பணியிடத்திற்கு சாலை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...