கோவையில் சிறுவனுக்கு சூடு வைத்த வளர்ப்பு தந்தை - போலீசில் புகார்!

கோவையில் 7வயது சிறுவனுக்கு சூடு வைத்து சித்ரவதை செய்த வளர்ப்பு தந்தை மீது, சிறுவனின் தந்தை உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


கோவை: கோவையில் சிறுவனுக்கு வளர்ப்பு தந்தை சூடு வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுல்தான் இப்ராஹிம் (33), இவர் கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியை சேர்ந்தவர் சர்மதா என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 7 வயது மகன் உள்ளார்.

இந்நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக சர்மதா இப்ராஹிமை பிரிந்து தனது மகனுடன் ஆட்டோ ஓட்டுநரான சாதிக்(38) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு உக்கடம் புல்லுக்காடு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் குழந்தையின் வளர்ப்பு தந்தையான சாதிக் கடந்த 15 ஆம் தேதி தோசை கரண்டியால் உடலில் சூடு வைத்து கொடுமைப்படுத்தியதாகத் தெரிகிறது.

இதையடுத்து கோவை வந்த தந்தை இப்ராஹிடம் சிறுவன் நடந்ததை கூறியுள்ளார். சிறுவனுக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய வளர்ப்பு தந்தை மீது நடவடிக்கை எடுக்க கோரி, தந்தை இப்ராஹிம் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...