நான் இறக்க போகிறேன்.. இறுதி விருப்பம் நிறைவேற உதவுங்கள்..! - கேரள பெண்ணின் பதிவுக்கு சத்குருவின் பதில்!

கேராவை சேர்ந்த காயத்ரி என்ற பெண், தான் இறக்கப் போவதாகவும், தனது கடைசி விருப்பமாக சத்குருவை சந்திக்க வேண்டும் என டுவிட்டரில் பதிவிட்டிருந்த நிலையில், அதற்கு பதிலளித்துள்ள சத்குரு நான் வெளிநாட்டில் இருப்பதாகவும், நாடு திரும்பும் போது தங்களை சந்திக்க ஆவலுடன் இருப்பதாக பதிவிட்டுள்ளார்.


கோவை: தான் இறக்கப்போவதாக டுவிட்டரில் பதிவிட்ட இளம்பெண்ணுக்கு சத்குருவின் பதில் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

சமூக வலைதளங்கள்‌ வெறும்‌ கேளிக்கைகளுக்கானது என்பதைத்‌ தாண்டி சில நேரங்களில்‌ நம்‌ நெஞ்சை தொட்டு விடும்‌ சம்பவங்களையும்‌ நடத்தி விடுகிறது. அந்த வகையில்‌ ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்‌ ட்விட்டர்‌ மூலம்‌ நடந்தேறி இருக்கிறது.

காயத்ரி என்ற பெண்மணி தன்‌ இறுதி விருப்பம்‌ குறித்த பதிவொன்றை டிவிட்டரில்‌ பதிவிட்டு இருந்தார்‌. அதில்‌ அவர்‌ "சத்குரு அவர்களை சந்திப்பது என்பது என்‌ வாழ்நாள்‌ விருப்பமாக இருந்து வருகிறது. நான்‌ வாழ்வதற்கு இன்னமும்‌ சில மாதங்கள்‌ மட்டுமே எஞ்சி இருக்கிறது என நவீன அறிவியல்‌ சொல்கிறது. யாரேனும்‌ நான்‌ என்‌ குருவை சந்திக்க உதவ முடியுமா? என்‌ இறுதி விருப்பம் நிறைவேற தயவுசெய்து உதவி செய்யுங்கள்‌." என்று பதிவிட்டுள்ளார்‌.

அந்த பெண்ணின்‌ உருக்கமான கோரிக்கைக்கு சத்குரு பதில்‌ அளித்துள்ளார்‌. அவர்‌ பதிவிட்டுள்ள ட்வீட்டில்‌ கூறியிருப்பதாவது, வணக்கம்‌ காயத்ரி. நான்‌ தற்போது பாரதத்திற்கு வெளியே பயணத்தில்‌ இருக்கிறேன்‌.

உணர்வளவில்‌ நான்‌ உங்களுடன்‌ இருக்கிறேன்‌. திரும்பும் போது உங்களை சந்திப்பதை எதிர்நோக்கி இருக்கிறேன்‌. மிகுந்த அன்பும்‌ ஆசியும்‌ " என்று அவர்‌ பதிவிட்டுள்ளார்‌.

இந்த சம்பவம்‌ சமூக வலைத்தளங்களில்‌ பலரின்‌ வரவேற்பையும்‌, பாராட்டுகளையும்‌ பெற்று வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...