பல்லடம் அண்ணாமலையார் கோவிலில் மனமுருகி வேண்டும் சிறுவன் - வைரல் வீடியோ!

பல்லடம் அடுத்த இடுவாய் கிராமத்தில் உள்ள உண்ணாமலை அம்பிகை சமேத அண்ணாமலையார் திருக்கோயிலில் தேவாரம் மற்றும் திருவாசகம் பாடல்களை பாடி சிவபெருமானை மனமுருக வேண்டும் 2ஆம் வகுப்பு படிக்கும் பள்ளிச் சிறுவனின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


திருப்பூர்: பல்லடம் அடுத்த இடுவாய் அருகே அண்ணாமலையார் கோவிலில் திருவாசகம் பாடி மனம் உருக வேண்டும் சிறுவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இடுவாய் கிராமத்தில் உண்ணாமலை அம்பிகை சமேத அண்ணாமலையார் திருக்கோயில் அமைந்துள்ளது.



இங்கு எழுந்தருளியுள்ள அண்ணாமலையார் மூலவர் சிலைக்கு முன்பு ஓம் என்ற இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் தேவாரம், திருவாசகம் பாடலை மனமுருக பாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பாராட்டை பெற்று வருகிறது.



இடுவம்பாளையத்தில் வசித்து வரும் முருக பாண்டியன் என்பவரது மகன் ஓம் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தேவாரம் திருவாசகத்தில் இருந்து 74 பதிகங்களை பாடி அசத்தும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சிறுவயதிலேயே இத்தகைய ஞாபக சக்தியோடும், பக்தியோடும் பாடும் சிறுவனின் பாடல்கள் சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...